Posts

Showing posts from December, 2013

நீ - நான் - காதல் - 04

Image
கருவிழியிரண்டு  கண்கொட்டாமல்  பார்க்குதென்னை பலப் பல கனவுகள்  காண்கின்றேன்  கயல்விழிகளில்  ஒரு பார்வைக்குள்  ஓராயிரம் பிரிவுகள்  வெட்கப் பார்வை  மோகப் பார்வை  அன்புப் பார்வை என  இன்னும் பல  எத்தனை தடவை  எப்படிப் பார்த்தாலும்  அத்தனையிலும் தெரிவது  அகத்தினில் தேங்கிக்கிடக்கும்  கற்கண்டு உள்ளத்தாள் கன்னியவள் காதல்!

சிகரம்பாரதியின் பிறந்தநாளும் நத்தாரும்!

Image
                                                வணக்கம் வாசக நெஞ்சங்களே! முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ் இனிய நத்தாரில் உங்கள் மனதிலிருக்கும் கவலைகள் நீங்கி இன்பங்கள் பெருகவும் எண்ணியவை எண்ணியபடி கைகூடவும் வருகின்ற நாட்கள் இனிமையாக அமையவும் மனதார வாழ்த்துகிறேன்.     அத்துடன் கிறிஸ்துமஸ் தினமான இன்று எனது பிறந்தநாளும் கூட. முதலில் எனக்கு நானே "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று கூறிக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துக்களை மட்டுமல்ல, ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.       உங்கள்  அன்பின்  சிகரம்பாரதி.

முக நூல் முத்துக்கள் பத்து - 04

Image
01.  ♦என் தாத்தா பூமியை தோண்டிய போது அவருக்கு நிறைய தங்கம் கிடைத்ததாம் ♦என் அப்பா பூமியை தோண்டிய போது அவருக்கு நிறைய தண்ணீர் கிடைத்ததாம் ♦நான் பூமியை தோண்டிய போது எனக்கு நிறைய கண்ணிவெடிகள் கிடைத்தது ♦என் மகன் பூமியை தோண்டும்போது அவனுக்கு நிறைய எலும்புக்கூடுகள் கிடைக்கும்..... 02. கொழுப்புதான் இந்த கோவில் யானைக்கு.. எல்லோரையும் ஆசிர்வாதம் செய்துவிட்டு உன்னைமட்டும் முத்தமிடுகிறது..  #சுட்டவை 03.  வாழ்வில் நீ  வெற்றி பெறும் போதெல்லாம் உன் முதல் தோல்வி  நினைவுக்கு வந்தால் உன்னை வெல்ல யாராலும் முடியாது. 04. நீ படிக்கிற அழகை நினைத்து நினைத்து எழுத முடியாமலே போய்விட்டது உனக்கான கடிதத்தை -பழநிபாரதி (முத்தங்களின் பழக்கூடை) 05.   06. நீ வெள்ளாடை அணியும் நாட்களெல்லாம் வேண்டுமொரு வங்கக்கடலின் தாழ்வு மண்டலம்... 07. ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்! கேட்டு வாங்கிப் போனீர்கள-பின் கேடே செய்வதாய் ஆனீர்கள்! நாட்டு நடப்பைப் பாருங்கள்-மிக நன்றா? ஒன்றா? கூறுங்கள்! காட்டுக் கூச்சல் ஒன்றேதான்-தினம் கட்