எதிரே மின்னஞ்சல் திருடர்கள் கவனம்! - இணையம் ஒரு தகவல்

வணக்கம் அன்பார்ந்த வலைத்தள வாசகர்களே. நமது அன்றாட வாழ்க்கையில் இணையம் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. சாதாரண மக்கள் தொடங்கி பெரும்புள்ளிகள் வரை அனைவரையும் இணையம் கட்டிப்போட்டிருக்கிறது. இணையத்தள பாவனையானது சில முக்கிய காரணங்களைக் கொண்டமைகிறது. அவை:

01. சமூக வலைத்தளம்
02. மின்னஞ்சல்
03. இணையவழித் தொலைத்தொடர்பாடல்
04. செய்திகள் (அனைத்து வகையானவையும்)
05. வலைப்பூக்கள்
06. தரவிறக்கங்கள்
07. தகவல் தேடல்

எந்த வகையான இணையப் பாவனையாக இருந்தாலும் இந்த 7 வகைகளுக்குள் அடங்கிவிடும் என்பது எனது நம்பிக்கை. இந்தக் கட்டுரைத் தொடரானது பாதுகாப்பானதும் இலகுவானதுமான இணையப் பாவனைக்கு வழிகாட்டும் ஒரு தொடராக அமையவிருக்கிறது. முதலில் மின்னஞ்சல் பாவனை பற்றிப் பார்ப்போம்.

http://www.theemailadmin.com/wp-content/uploads/2012/11/GFI244-email-jpg1.jpg

இணையம் பாவிப்போரில் பெரும்பாலானோருக்கு ஏதோவொரு மின்னஞ்சல் கணக்கு இருக்கும். வர்த்தகம், தனிப்பட்ட மற்றும் பொதுப் பாவனை கருதி மின்னஞ்சல்கள் பாவிக்கப் படுகின்றன. இந்த மின்னஞ்சல் கணக்குகள் மூலம் தனிப்பட்ட தகவல்களும் பரிமாறப்படுவதால் நமது பாதுகாப்பானது கேள்விக்குள்ளாகின்றது. இணையத்தள குற்றங்களில் 25 வீதமானவை மின்னஞ்சல் திருடர்களினாலேயே இழைக்கப்படுகின்றன.

ஆகவே பாதுகாப்பான மின்னஞ்சல் பாவனைக்கு பல்வேறு வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்ட வண்ணமே உள்ளன. அவற்றுள் பல கடினமானவையாகவும் சாமானியர்களால் கடைப்பிடிக்க முடியாதவையாகவும் உள்ளன. உங்களுக்கும் அது போன்றதொரு அனுபவம் நேர்ந்திருக்கலாம். அப்படியானால் இந்த வழிமுறைகளைக் கொஞ்சம் பின்பற்றிப் பாருங்களேன்?

01. நம் பாவனை வகைக்கமைய வெவ்வேறு மின்னஞ்சல் கணக்குகளை பராமரித்தல்.

தற்போது பல்வேறு மின்னஞ்சல் கணக்குகளை ஒரு மின்னஞ்சல் கணக்கினூடாக பராமரிக்கக் கூடிய வசதி எல்லா மின்னஞ்சல் சேவை வழங்குனர்களினாலும் வழங்கப்பட்டுள்ளது.

02. தற்காலிக மின்னஞ்சல் கணக்குகளை பாவித்தல்.
குறுகிய காலப் பாவனை கருதி மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் இணையத்தளங்கள் பல உள்ளன. நமது விபரங்கள் எதையும் வழங்காமல் முன்பதிவு இல்லாமல் எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளைக் கொண்டு நமது தற்காலிக தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதன் மூலம் நமது பிரதான மின்னஞ்சல் கணக்குகளின்  ரகசியத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இணையத்தில் temporary email என்று தேடுவதன் மூலம் குறித்த இணையத்தளங்களின் பட்டியலைப் பெற்றுக் கொள்ள முடியும்.


ஒவ்வொரு இணையத்தளங்களும் சில வித்தியாசங்களைக் கொண்டுள்ளன என்பதால் அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்.

03. உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை இணையத்தளங்களுக்கு வழங்க முன்பதாக அவர்கள் என்ன நோக்கத்துக்காக கேட்கிறார்கள் என்பதை அறிந்து பொருத்தமான மின்னஞ்சல் முகவரியை வழங்குங்கள்.

04. குறைந்தது இரண்டு மின்னஞ்சல் கணக்குகளையேனும் பயன்படுத்துங்கள். உங்கள் தனிப்பட்ட தேவைக்கும் பொதுவான தேவைகளுக்கும் என அவற்றை வகைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

05. பொது இடங்களில் மின்னஞ்சல் கணக்குகளைக் கையாளும் போது அவதானமாக இருங்கள்.

அதாவது இணைய உலாவி மையங்களில் (Internet Browsing Centers) உங்கள் மின்னஞ்சல் கணக்கினை உபயோகித்து முடிந்ததும் பொறுமையாக இருந்து முறையாக கணக்கிலிருந்து வெளியேறிவிடுங்கள் (Log out).


உங்கள் இணையப் பாவனை முடிந்ததும் நீங்கள் உலாவிய நேரத்துக்குரிய இணையத் தரவுகளை (History) முழுமையாக அழித்துவிடுங்கள்.

இவை பொதுவான அறிவுறுத்தல்கள் தான். இன்னும் ஏதேனும் இருப்பின் அடுத்த பகுதியில் சொல்கிறேன். உங்களுக்குத் தெரிந்த வழிமுறைகள் இருந்தால் பின்னூட்டம் ஊடாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் நாளை சந்திக்கும் வரை
அன்புடன்,
சிகரம்பாரதி.

Comments

  1. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்...

    தொடருங்கள்... வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. தகவல்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் நன்றி

    ReplyDelete
  3. புதியவர்களுக்கு கட்டாயம் தேவையான பதிவு .. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  4. மிகவும் பயன்தரும் தகவலுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!