நீ - நான் - காதல்

மணிக்கணக்காய் 
பேசியும் தீரவில்லை - நம் 
பேச்சு 
அலைபேசிக்கே 
அலுத்திருக்கும் - ஆனால் 
குறையாது 
நமக்குள்ளே 
பூத்திருக்கும் புதுச் சுகம் 


சிரிப்பு பாதி
கோபம் மீதி என 
நகர்கின்றன 
நம் நாட்கள் 
அலுக்காத பேச்சும் 
அனுப்பிக்கொண்டே இருக்கும் 
குறுஞ் செய்திகளும் 
நம் காதலின் 
அன்றாட 
அடையாளங்கள் 

அலைபேசியிலேயே
கொஞ்சிக் கொள்வதும் 
எப்போது தான் 
கல்யாணமோ என்று 
ஏக்கப் பெருமூச்சு 
விட்டுக் கொள்வதும் 
நம் மேடையில் 
அன்றாடம் 
அரங்கேறுபவை 



திங்கள் முகத்தாளை 
திங்கள் ஒரு முறை 
சந்திக்கும் போது 
சர்க்கரையாய்த் தித்திக்கும் 
நம் அன்றைய பொழுது 

அந்தி மயங்கும் 
வேளையில்  
பிரியாவிடை பெற்று 
'போய்வரவா' என்று 
கேட்கும் போது 
கேளாமலே 
கண்ணீர்த் துளியிரண்டு 
துளிர்த்து நிற்கும் 
நம் இருவர் கண்களிலும் 

உன்னை 
வழியனுப்பி வைத்துவிட்டு 
உள்ளமதையும் 
உன் பின்னால் 
காவலுக்கு அனுப்பி விட்டு 
உடலை மட்டும் 
சுமந்து கொண்டு 
ஊர் வந்து சேர்கையில் 
மறுபடியும் 
ஆரம்பிக்கும் 
அலைபேசியின் கொஞ்சல் ஒலி 

மீண்டும் 
தொலைந்து போவோம் 
நாம் 
நமக்குள்ளும் 
நம்மை இணைக்கும் 
அலைபேசிக்குள்ளும் ................

வருங்கால கனவு தேவதைக்கு "சிகரம் பாரதி" தரும் பாத காணிக்கை.

*****************************
கவிதைக்கொரு கீதம்:

சொல்லிட்டாளே அவ காதல.......
சொல்லும் போதே சுகம் தாளல ........

திரைப்படம்: கும்கி 
நன்றி: YOUTUBE. 





பதிவு வெளியிடப்பட்டது: 20 நவம்பர், 2012 
திருத்தப்பட்டது: 10 பெப்ரவரி , 2019 

இக்கவிதை இலங்கையின் பிரபல நாளிதழான 'மெட்ரோ நியூஸ்' இன் வாரப் பதிப்பில் 'முத்திரைக் கவிதைகள்' பகுதியில் 08-02-2019 அன்று 'மெட்ரோ Plus - B 12' பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

Comments

  1. அருமை... ரசித்தேன்...

    நல்ல கண்ணொளி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி உள்ளமே. முதல் ஆளாய் வந்து கருத்திட்டமைக்கும் நன்றிகள்.

      Delete
  2. தொலைந்து விட்டால், நன்றாகத் தான் இருக்கும்... தொலைந்து விடுங்கள், யாராலும் காண இயலாதபடி...

    அருமை...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக.... எல்லோருமே என்றோ ஒரு நாள் காதலுக்குள் தொலைந்து போகத் தானே போகிறோம்? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உள்ளமே.

      Delete
  3. காதலிக்கும் பொழுது
    பேசுவது இனிமையாகத் தான் இருக்கும்....

    கவிதை அருமை பாரதி.

    ReplyDelete
  4. கவிதை உணர்வு பொய்யல்ல.உண்மையென உரைக்க ஒரு துளி நீர் உன் கண்ணில்....என் கண்ணிலும்...அருமை பாரதி.திங்கள் முகத்தாளை
    திங்கள் ஒரு முறை ..... ரசித்தேன் !

    ReplyDelete
  5. கவிதை மிகவும் அருமை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  6. காதல் என்றாலே அப்படித்தான்!
    அருமை

    ReplyDelete
  7. அருமையான காணொளி இணைப்பு

    ReplyDelete
  8. அழை பே சி காத லர்களுக்கு அருமையான கவி, வெற்றிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. உங்கள் கவி வரிகளின் மூலம் என் நிஜ வாழ்வை நினைத்துப் பார்த்தேன். நன்றி . கவி பயணம் தொடர என் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  10. இது அம்மாவின் கைசியோ!

    ReplyDelete
  11. இனிமையான பாடலுடன் பதிவும் அருமை பாராட்டுகள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!