Sunday, November 11, 2012

ஹை..... ஜாலி....... காமிக்ஸ் வரப்போகுது......

அன்பு வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். தொடர் பதிவின் 7 ஆம் பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. காமிக்ஸ் கதைகள் தொடர்பில் நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். இதோ மீண்டும் ஒரு காமிக்ஸ் பதிவு! கோகுலம் வாசகர் வட்டமானது காமிக்ஸ் வாசிப்பினை இலங்கையில் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவரவுள்ள 'முத்து காமிக்ஸ்' இன் 'Never Before Special' வெளியீட்டினை சுடச்சுட பெற்றுக் கொடுக்கும் நோக்கில் முன்பதிவுகளை ஆரம்பித்துள்ளது. கீழுள்ள படத்தில் முன்பதிவுகளை மேற்கொள்வது குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன. இதுவரை முன்பதிவுகளை மேற்கொள்ளாத காமிக்ஸ்  காதலர்கள் உடன் விரையுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் இத்தகவலை தெரியப் படுத்துங்கள்.


இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பதாக முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோகுலம் வாசகர் வட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தாமதமான பதிவு தான். ஆனால் தவற விட்டால் மீண்டும் கிடைப்பது அரிது. எனவே முந்துபவர்களுக்கே முன்னுரிமை. இந்த விசேட வெளியீடு தவிர ஏனைய காமிக்ஸ் வெளியீடுகளையும் 'கோகுலம்' தரப்பினரினரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இந்திய வாசகர்கள் 'லயன்-முத்து காமிக்ஸ்' என்ற காமிக்ஸ் வெளியீட்டாளர்களின் நேரடி வலைத்தளத்தின் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இன்றைய தினம் பகல் வேளையில் தான் நானும் முன்பதிவுக்கான கட்டணமாக ரூ.1750 இனை செலுத்திவிட்டு வந்தேன். NBS விசேட வெளியீட்டுக்காக காத்திருக்கும் பல நூறு வாசகர்களுள் நானும் ஒருவனாய் மாறியுள்ளேன். குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவித்திட காமிக்ஸ் கதைகள் மிகப் பொருத்தமான தேர்வு. குழந்தைப் பருவத்தில் எனக்குக் கிடைக்காத காமிக்ஸ் அனுபவத்தினை இப்போது பெற்றுக் கொண்டிருக்கிறேன். என்ன, காமிக்ஸ் NBS வெளியீட்டுக்கு கட்ட பணத்தை தயார் பண்ணிவிட்டீர்கள் போலிருக்கிறது? வாழ்க காமிக்ஸ். மீண்டும் நாளை மற்றுமொரு பதிவுடன் சந்திப்போம். அதுவரை காமிக்ஸ் பற்றிய அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை இங்கே பகிர்ந்திடலாமே?

3 comments:

  1. நல்லதொரு தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. அருமை.

    தொடர்ந்து காமிக்ஸ் பற்றி எழுதுகள்.

    நன்றி

    ReplyDelete
  3. நண்பா, நல்லதொரு தகவல்...

    காமிக்ஸ் என்றால் அவ்வளவு பிடிக்குமா???

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?