காமிக்ஸ் பண்டிகைக் கொண்டாட்டம்!

வணக்கம் பதிவுலக உள்ளங்களே! ஒரு முக்கியச் செய்தியுடன் இப்பதிவு உங்களை நாடி வருகிறது. நான் அறிந்த ஒரு விடயத்தை நீங்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் இப்பதிவினை எழுதுகிறேன். சற்றே அவசரத்துடன் இதனை வெளியிட வேண்டியிருக்கிறது. காரணம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது.

தலைப்பைப் பார்த்ததுமே சிலருக்கு பதிவு எதைப் பற்றி அமையப் போகிறது என்பது புரிந்திருக்கும். ஆம்! நம் அபிமான "காமிக்ஸ் கதை"கள் பற்றிய பதிவு தான் இது. இலங்கையில் காமிக்ஸ்களுக்கு புத்துயிரளித்துக் கொண்டிருக்கும் "கோகுலம் வாசகர் வட்டம்" ஆனது தற்போது பழைய காமிக்ஸ் கதைகளைப் பெற்று வாசிப்பதற்கான வழிமுறைகளை அறிவித்துள்ளது. காமிக்ஸ் கதைகள் மீதான ஆர்வத்தின் காரணமாக "கோகுலம் வாசகர் வட்டம்" உடன் மின்னஞ்சல் மூலமான தொடர்புகளைப் பேணி வரும் நான் அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலமாக தந்த செய்தியையே இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். மேலதிக விபரங்களுக்கு: kogulamrc@gmail.com

Image Credit : Google / tamilcomicsulagam.blogspot.com


Lion Jolly Special, Lion Cow boy Special (Lion 200th issue) இதழ்களை தவறவிட்ட நண்பர்களே! 

அவற்றில் ஒன்றிரண்டு இதழ்கள் இப்போது வெள்ளவத்தை DSIக்கு அருகில் உள்ள பஸ் நிலையத்துக்கு பின்னாலுள்ள பத்திரிகை விற்கும் கடையில் உள்ளன. தேவைப்படுபவர்கள் முந்திக்கொள்ளுங்கள்! 

--------------------------------------

ஆமர் வீதி, கொட்டாஞ்சேனையை அண்மித்து இருக்கும் நண்பர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!!! 

ஆமர் வீதிச் சந்தியில் அமைந்துள்ள புத்தகங்கள் விற்கும் கடையில் பல லயன், முத்து காமிக்ஸ்களின் முன்னைய வெளியீடுகள் (டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர், ஜேம்ஸ் பாண்ட், லக்கி லூக், மாடஸ்டி பிளைஸி) ரூபா 75, 65 விலைகளில் கிடைக்கின்றன. பிரதிகள் குறைவான எண்ணிக்கையிலேயே கிடைப்பதால் முந்திக்கொள்ளுங்கள்!

இப்போதைக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் அங்கிருக்கும் லயன், முத்து வெளியீடுகள் விபரம்: 

(டெக்ஸ வில்லர் கதைகள்): இருளின் மைந்தர்கள் (சற்று பெரிய புத்தகம்), கொடூர வனத்தில் டெக்ஸ், பயங்கரப் பயணிகள், காலன் தீர்த்த கணக்கு, சதுப்பில் ஒரு சதிகாரக் கும்பல், 

(கேப்டன் டைகர் -ப்ளுபெரி கதை): தனியே ஒரு கழுகு,

(மாடஸ்டி பிளைஸி கதை): மரணத்தை முறியடிப்போம், 

(லக்கி லூக் கதைகள்): சு மந்திரக் காளி, மேற்கே ஒரு மாமன்னர், 

(ஜேம்ஸ் பாண்ட் கதை): மரண முகம், (மர்ம மனிதன் மார்ட்டின் கதை): அமானுஷ்ய அலைவரிசை, (டிடெக்டிவ் ராபின் கதை): மரணத்தை முறியடிப்போம். 

ஒரு காமிக்ஸ் புதையலே இருக்கிறது; தவறவிடாதீர்கள் நண்பர்களே!

மேலும் கொழும்புப் பிரதேச வாசகர்களுக்கே இந்த "காமிக்ஸ் பண்டிகைக் கொண்டாட்டம்!" இனை அனுபவிக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. கிடைத்தவர்கள் அனுபவியுங்கள். மற்றையோர் உங்கள் பழைய காமிக்ஸ் கதைகளின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இப்போது என் கையில் "மேற்கே ஒரு மாமன்னர்" மற்றும் "இருளின் மைந்தர்கள்" ஆகிய பழைய காமிக்ஸ்கள் உள்ளன. முறையே ரூபா 75 மற்றும் 150 ஆகிய விலைகளில் வாங்கியிருக்கிறேன். அவை பற்றிய வாசிப்பு அனுபவம் பிறிதொரு பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் படும். எனது இன்றைய இரவு காமிக்ஸ் கதாநாயகர்களோடு உற்சாகமாக கழியப் போகிறது. எனது முன்னைய காமிக்ஸ் கதைகள் பற்றிய பதிவு இங்கே: சாத்தானின் தூதன் டாக்டர் 7! இப்பதிவுக்கு ஆதரவு தந்த காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. மீண்டும் சந்திப்போம் உள்ளங்களே!

Comments

  1. பலருக்கும் உதவும்... நன்றி சகோ...

    ReplyDelete
  2. காமிக்ஸ் கதை பிரியர்களுக்கு பயனுள்ள தகவல்.நன்றி நண்பரே.
    என்னுடைய தளத்தில்

    தன்னம்பிக்கை -3

    தன்னம்பிக்கை -2

    ReplyDelete
  3. நான் இது வரைக்கும் காமிக்ஸ் படித்ததே கிடையாது...
    உங்களின் பதுவினைப் பார்க்கும் போது அது ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்குமோ எனத் தோன்றுகிறது...
    சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது படிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. படித்துப்பாருங்கள் நண்பரே. ஆரம்பித்தீர்களோ, அதன் பின்னர் விடமாட்டீர்கள். அவ்வளவு சுவாரஸ்யம். இன்று மொபைல் போன், சமூக வலைத்தளங்கள், மது, மாது என்று திசைமாறிப் போய்க்கொண்டிருக்கும் இளைய சமுதாயம் காமிக்ஸ் வாசிப்புப் பழக்கத்தின் பக்கம் திரும்பியிருந்தால் ...... எவ்வளவு ஆரோக்யமான சமுதாயம் எமக்குக் கிடைத்திருக்கும். வாசிக்க ஆரம்பியுங்கள் காமிக்ஸ்களை; இனியும் தாமதம் வேண்டாம் நண்பரே!

      Delete
  4. காமிக்ஸ் அப்டினா என்ன? நெறைய பேரு யூஸ் பண்ணுறாங்க இந்த வார்த்தைய, எனக்குதான் புரிய மாட்டங்குது......

    ReplyDelete
    Replies
    1. உண்மையச் சொல்கிறீர்களா? இல்லை கிண்டலுக்கா என்பது தெரியவில்லை. ஆனாலும், எனக்கு தெரிந்ததைச் சொல்கிறேன். காமிக்ஸ் என்பது சித்திரக் கதை வடிவம். கட்டம் கட்டமாக, கட்டங்களினுள் படங்களும் அந்தப் படங்களில் இருப்பவர்கள் கதைப்பதுபோல பலூன் வடிவில் எழுத்துக்களை கொண்டதுமான படக்கதை வடிவமே காமிக்ஸ். உங்கள் நாட்டில் (இந்தியாவில்) சிவகாசியில் இருந்து லயன் காமிக்ஸ் நிறுவனத்தார் தொடர்ச்சியாக காமிக்ஸ் வெளியிட்டுவருகிறார்கள். இப்போது வெளியீடுகளின் தரம் அதிகரித்திருக்கிறது. முழு வர்ணத்தில் ஆர்ட் பேப்பரில் பெரிய சைஸில் புத்தகங்கள் வருகின்றன. கடைகளில் கிடைப்பது அரிது. சந்தாமுறையே நடைமுறையில் உள்ளது.

      Delete
    2. பதிலுக்கு மிக்க நன்றி நண்பா. எனக்கு இப்போது தான் ஞாபகம் வருகிறது, நான் என் சிறு வயதில் ஒரு காமிக்ஸ் படித்திருக்கிறேன். அது காமிக்ஸ் புத்தகம் என்று தாங்கள் கூறியதன் பின் தான் தெரிந்துகொண்டேன். அப்போது கடலைக் கொள்ளையில் இரவு தங்கி கடலைப் பிடுங்கி ஆயுவோம். அப்போது தற்ச்செயலாக அந்த புத்தகம் என்னிடம் கிடைத்தது.புத்தகத்தின் பெயர் வீரனும் கரும்புளியும் என்பதாய் ஞாபகம். அந்தக் காட்டில் விலக்கு வெளிச்சத்தில் சத்தத்துடன் படிப்போம் அந்தக் கதையை. அதில் புலியும் கரும்புலியும் சண்டையிடும் காட்சியை (உர்ர்ர், ஆஆஆ) என சத்தத்தோடு படிப்போம். அருமையான நினைவுகள்... நன்றி

      Delete
  5. உண்மையில் இது இனிப்பான செய்தி தான்....!சிறுவயதில் படித்த நினைவகள் வருகிறத நண்பா...!நன்றி பகிர்விற்காய்.

    ReplyDelete
  6. நானும் காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்தால் விட மாட்டேன்.
    ஆனால் இங்கே(பிரான்சு) கிடைப்பதில்லை பாரதி.
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  7. உங்கள் காமிக்ஸ் பதிவுக்கும் தகவல்களுக்கும் நன்றி. இன்னும் உங்கள் சுவாரஸ்யமான காமிக்ஸ் பதிவுகளை எதிர்பார்க்கிறேன். இதனை தமிழ் காமிக்ஸ் Facebook Page and Group இல் இணைத்துள்ளார்கள்.

    ReplyDelete
  8. அருமை; அருமை. உங்கள் தமிழ் காமிக்ஸ் பற்றிய பதிவுகள் மிகவும் பயனுள்ளவை. நன்றி. இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கள் காமிக்ஸ்கள் பற்றி. எதிர்பார்த்திருக்கிறோம்.

    காமிக்ஸ்களை வாங்குவதன்மூலம் மிகப்பெரிய சேவை ஒன்றைச் செய்கிறீர்கள். காமிக்ஸ் சேகரிப்பு ஒரு பயன்மிக்க பொழுதுபோக்கு; எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்ல சேமிப்பு!

    KogulamRC

    ReplyDelete
  9. அருமையான பதிவு.

    தொடர்ந்து காமிக்ஸ் பற்றி(யும்) பதிவிட வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!