Saturday, August 11, 2012

டாஷ்போர்டு புட்டுக்கிச்சி !

எல்லாத்துக்கும் வணக்கமுங்க!
போன மாசம் வரைக்கும் என்னோட வலைப்பதிவு நல்லாத்தான் இருந்திச்சி. என்னோட வளர்ச்சி புடிக்காம [????] யாராச்சும் சூனியம் வச்சிருப்பாங்கன்னு நெனைக்கிறேன். நம்ம பிளாக்கர் டாஷ்போர்டு புட்டுக்கிச்சுங்க. நானும் என்னென்னமோ பண்ணிப் பார்த்துட்டேன். ம்ஹும்... ஒன்னும் வேலைக்கே ஆகல. ஆகக் கடைசியா ஒன்னு பண்ணேன். நம்ம காளி கோயில் பூசாரியைக் கூப்பிட்டு பிளாக்குக்கு விபூதி மந்திரிச்சு வச்சும் பார்த்தேன்.

அதுக்கும் சரி வராததால மறுபடியும் அவர அழைச்சுக்கிட்டு வந்தேன். அவுரு "தம்பீபீபீ......................." அப்படின்னு சாமிய வரவழைச்சுக்கிட்டு என்னக் கூப்பிட்டார். பயத்துல பதறிப் போன நான் என்னோட பிளாக்கு சைடு பார்ல போய் பசக்குன்னு ஒட்டிக்கிட்டேன். இழுத்துப் புடிச்சு மறுபடியும் கீழ உக்கார வச்சார். "இது சர்வதேச சக்திகளோட சதின்னு என் காளி சொல்றா.... என்னால எதுவும் பண்ண முடியாது. வேணும்னா ஒரு தாயத்து மந்திரிச்சுத் தாறேன்"னார். "சரி"ன்னு ஒரு தாயத்த வாங்கி கீபோர்ட சுத்தி கட்டி வச்சேன். 

கடைசில டைப் பண்ணத்தான் கஷ்டமாகுனிச்சே தவிர பிரச்சன தீரல. அதால குறி சொல்றவர கூட்டிக்கினு வந்தேன். அவரு "தெற்குப் பக்கத்துல இருக்கறவன் தான் உனக்கு செய்வின வச்சிருக்கான்"னார். நா அத எடுக்குறதுக்கு வழிய கேட்டுக்கிட்டு பேசாம இருந்துருக்கணுமா இல்லையா? என் வாய் சும்மா இருக்க முடியாம "வச்சவரு பேரு, அட்ரஸ் எல்லாம் கண்டு புடிப்பீங்களா?"ன்னு கேட்டுப்புட்டேன். அப்படியே மயக்கம் வந்து கீழ விழுந்திட்டார். சடார்னு கொஞ்சூண்டு தண்ணிய எடுத்து மூஞ்சில தெளிச்சிட்டு ஓடிப்போய் ஒளிஞ்சுக்கிட்டேன். சாபம் கீபம் விட்டுட்டாருன்னா?  

என்னோட பிளாக்கர்ல எல்லாமே செய்ய முடியுதுங்க. ஆனா டாஷ்போர்டுக்கு மட்டும் போகவே முடியுதில்ல. அத கண்டுபுடிக்கத்தான் இவ்வளவு போராட்டமும். டாஷ்போர்டுக்கு பதிலா கீழ உள்ள இந்த அறிவித்தல் தானுங்க வருது. 


உடைந்த பிளாகர் லோகோ


அச்சச்சோ, பிழை.

சிரமத்திற்கு வருந்துகிறோம்.
திரும்பவும் பொருட்கள் அதே வரிசையில் உள்ளதா என்பதைப் பார்க்க, பக்கத்தைப் புதுப்பிக்க முயலவும்.
இன்னும் சிக்கல் தொடர்ந்தால், பின்வருவதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்:

நமக்கு இங்கிலீசு வேற சுத்தமா வராதா, அதால அவங்க தார இணைப்புல என்ன தீர்வு சொல்லிருக்காங்கனு தெரிஞ்சுக்க முடியுதில்ல. இந்த மாசம் தோங்குனதுல இருந்தே இப்படித்தான். ரொம்ப கன்பீசனாகிப் போயிருக்கேன். யாரவது உதவி செய்யுங்களேன். புண்ணியமாப் போகும் சாமிகளா... என் பிரச்சினைய தீர்த்து வைக்கிறவங்க தலைல....  மன்னிக்கணும்...... வார்த்தைகள்ல கொஞ்சம் கோளாராகிப் போச்சு..... என் பிரச்சினைய தீர்த்து வைக்கிறவங்களுக்காக மலேசியா புத்தர் சந்நிதில போய் 10000000000000000000 தேங்கா உடைக்கிறேன். (எல்லாரும் என்னைய அப்படிப் பாக்காதீங்க.   உண்மையாத்தான்....) 

இந்தப் பதிவுல என் எழுத்து வேணும்னா மொக்கையா இருக்கலாம். ஆனா பிரச்சினை உண்மை. தீர்வுக்காக சாப்பிட்டு தூங்கி என் வேலையெல்லாம் முடிஞ்சி நேரம் இருந்தா காத்திருக்கேன் (ஒன்னுமே பண்ணாம காத்திருப்பேன்னு நா சொன்னா நம்பவா போறீங்க?).
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். நம்ம பதிவுக்கு நெறையா பேரு வாறீங்க (பேரு அட்ரெஸ் எல்லாம் கலெக்ட் பண்ணித்தான்  வச்சுருக்கேன்). ஆனா கமெண்ட்ஸ் போடாம அப்பிடிக்கா திரும்பி ஓடிப் போயிருறீங்க. ஏன்யா என் வலைப்பதிவுக்கு மட்டும் இப்படியெல்லாம் பண்ணுறீங்க? அதுனால இந்தப் பதிவுக்கு ஐ வாண்ட்டு 50  கமெண்ட்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஓகேகேகே????????????????????? இல்லாட்டி ஐயாம் கில்லிங்கு ஆல் யு..... வாங்கையா வாங்க..... கருத்தெழுத ஆரம்பிச்சுட்டீங்களா? நல்லா எழுதுங்க. நா பிறகு வந்து பாத்துக்குறேன்.

48 comments:

 1. பாரதி என்னப்பா......பயபுள்ள ரொம்பத்தான் நொந்து போச்சு போல...

  சத்தியமா மன்னிக்கோணும்.எனக்கு இதுக்கு என்ன பண்ற எண்டே தெரியா...ஆனாலும் நண்பா தெரிஞ்சதுக்கப்புறம் எனக்கம் சொல்லுங்க..செய்வினை நம்ம திசைக்கு மாறினா தேவைப்படுமே...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிசயா. உங்களுக்கும் தெரியாதா? எல்லாம் என் நேரம். # செய்வினை நம்ம திசைக்கு மாறினா தேவைப்படுமே...!# முன்பாதுகாப்பா? தெரிஞ்சா சொல்றேன். உங்க நல்ல மனசுக்கு நன்றி உள்ளமே.

   Delete
  2. ஹி...ஹி...ஹி.. உங்க நல்ல மனசுக்கும்மா.

   Delete
 2. பாரதி சார்...நிதானமா வாங்க...!
  எங்க ஊர்க்கு வாங்களேன்...மாந்திரீகம் ஒன்று தெரிஞ்சதா ஒருத்தர் சொன்னாரு...உங்கள்ள அப்பிளை பண்ணிப்பமா???

  ஏம்பா எனக்கு அழுகையா வருது.சத்தியமா எனக்கும் உதவி பண்ணத்தா ஆசை.ஆனா தெரியலயே:(

  ஊறுகா பத்தி ஏதும் டவுட்டு வந்தா எனக்கு தகவல் தாங்க.எத்தினை போத்தல் வேணாலும் சாப்பிட்டு காட்டுவன்.சந்திப்போம் சொந்தமே!

  விரைவில் சரியாகணும்.!

  ReplyDelete
  Replies
  1. #உங்கள்ள அப்பிளை பண்ணிப்பமா???#
   ஏம்மா இந்தக் கொலை வெறி?
   #ஏம்பா எனக்கு அழுகையா வருது.#ஏம்பா எனக்கு அழுகையா வருது.
   #எத்தினை போத்தல் வேணாலும் சாப்பிட்டு காட்டுவன்#
   அப்ப எனக்கு தர மாட்டீங்களா? எனக்கு ஊறுகா இப்பவே வேணும். இல்லாட்டி செய்வினைய உங்க பக்கம் திருப்பி விட்டுருவேன்.
   நன்றி உள்ளமே.

   Delete
  2. ஊறுகா தானே..கட்டாயம் தாறன்.பரிசு ஒன்று பெண்டிங்ல இருக்கு.1 தொப்பியும் இருக்கு.அத தர வருவீங்கல்ல.அப்ப தாறன் சொந்தமே

   Delete
  3. அது. ஊறுகா ஒரு போத்தல் டேபிள்.........

   Delete
 3. வணக்கம் நண்பரே!

  உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

  தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
  யாழ் மஞ்சு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி உள்ளமே.

   Delete
 4. தம்பி, ரொம்ப, ரொம்ப, ரொம்ப வருந்துகிறேன். என்னோட டேஷ்போர்டை வேணும்னா தரட்டுமா?

  ReplyDelete
  Replies
  1. முதல் வரவு தொடர் வரவாகட்டும். மொத்தப் பதிவுகளோட தருவீங்களா?

   Delete
 5. தம்பி, ரொம்ப, ரொம்ப, ரொம்ப வருந்துகிறேன். என்னோட டேஷ்போர்டை வேணும்னா தரட்டுமா?

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...... எத்தன டாஷ்போர்டையா இருக்கு உங்களுக்கு? பத்துப் பதினஞ்சு இருக்குமோ?

   Delete
 6. தம்பி, ரொம்ப, ரொம்ப, ரொம்ப வருந்துகிறேன். என்னோட டேஷ்போர்டை வேணும்னா தரட்டுமா?

  ReplyDelete
 7. இவ்வளவு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

  ReplyDelete
  Replies
  1. போதும் போதும். இதுக்கு மேல என்னால தாங்க முடியாது. அழுதுருவேன். தங்கள் வரவுக்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி உள்ளமே.

   Delete
 8. ரொம்பத் தான் கஷ்டம் பட்டுட்டீங்க போல... இனி : தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க.....
   #இனி : தொடர வாழ்த்துக்கள்...#
   ஏது கஷ்டமா? நன்றிகள் உள்ளமே.

   Delete
 9. எதாவது மாறிப் போயிருக்கும் பிளாக்கர் நண்பன் இது பற்றி நிச்சயம் எழுதி இருப்பார்.. அங்கேயும் ஒரு பொய் மந்திரித்து வாருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஓ. அப்படியும் ஒரு மந்திர வாதியா? ரொம்ப சக்தி வாய்ந்தவரோ? சீக்கிரமே அவர சந்திக்கிறேன். நன்றி உள்ளமே.

   Delete
  2. மந்திரம் செய்ய நான் மாண்ட்ரேக் அல்லவே?

   :D :D :D

   ஒரு சந்தேகம். டாஷ்போர்ட் போகமுடியவில்லை என்றால் இந்த பதிவு எப்படி எழுதுநீர்கள்?

   :D :D :D

   Delete
  3. #மந்திரம் செய்ய நான் மாண்ட்ரேக் அல்லவே?#
   மாண்ட்ரேக்னா யாரு????
   முதலில் டாஷ்போர்டை அடைய முயற்சிப்பேன். அப்போது மேற்சொன்ன செய்தி வரும். அதன் பின் அதே address bar இல் எனது வலைப்பதிவு முகவரியை இட்டு அதனூடாக இடுகைப் பட்டியல் உள்ளிட்ட ஏனைய பகுதிகளுக்கும் செல்ல முடியும் [ டாஷ்போர்டு தவிர].
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். சந்திப்போம் உள்ளமே.

   Delete
  4. சும்மா காமெடிக்கு சொன்னேன். :D :D :D

   மாண்ட்ரேக் என்பது மாயாஜாலம் செய்யும் காமிக்ஸ் கதாபாத்திரம்.

   இப்போ சரியாகிவிட்டதா?

   Delete
  5. சரியாகி விட்டது தோழரே. பிறிதொரு வலைத்தளம் வழங்கிய விட்ஜெட்டை இணைத்திருந்தேன். அது தான் குடைச்சலை கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறது. பிளாக்கர் அதனை தானாகவே நீக்கி விட்டது. மிக்க மகிழ்ச்சி உள்ளமே.

   Delete
 10. வேணுமின்னா இன்னொரு கூகிள் அக்கௌண்டிற்கு அட்மின் ரைட்ஸ் கொடுத்துவிட்டு பிரச்சினை சரியாகுமட்டும் பாவித்துப் பாருங்களேன். :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி உள்ளமே. முயன்று பார்க்கிறேன். முதல் வருகை தொடர் வருகையாகட்டும். வருகைக்கும் பின் தொடர்கைக்கும் மிக்க நன்றிகள். சந்திப்போம் உள்ளமே.
   :)

   Delete
 11. bayama irukkaia. seivinai athu ithu ennuddu.

  ReplyDelete
  Replies
  1. என்னப்பா பண்ண? எனக்கு நடந்தத சொன்னேன். எதுக்கும் நீங்களும் கொஞ்சம் கவனமா இருங்க. முதல் வருகை தொடர் வருகையாகட்டும். சந்திப்போம் உள்ளமே.

   Delete
 12. எனக்கும் யாரோ சூனியம் வைத்துவிட்டனர்...

  ReplyDelete
  Replies
  1. ஆமால்ல............???????? ஒரு வேளை நம்மள கூட்டத்தோட ஒழிக்க சதி நடக்குதோ????? நாம தான் பிரபல பதிவர்களாகிட்டு வாறோமே???? அதுனாலையா இருக்கும். கவனமா இருங்கப்பு......சந்திப்போம் உள்ளமே.

   Delete
  2. நம்மை ஒழிக்க நினைப்பவர்களை நாம் அழித்து விடுவோம் நண்பா...

   Delete
  3. கண்டிப்பா.... எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும். இல்லாட்டி இப்படித்தான் ஆகும்???? இது பொது இடம். வாங்க ரகசியமா திட்டம் போடலாம்!!!!!!!!!!

   Delete
 13. அடடே. எனக்கு தெரியாதே. இதற்கு நம்ம பிரசன்னம் பார்க்கவில்லையா? சொல்லியிருந்தால் இன்நேரம் சோழி உருட்டி பார்த்து சொல்லியிருப்பார்களே.

  தீவினைகள் பல நாட்கள் நிடிப்பதில்லை. இறுதியில் நீதியே வெல்லும் என்ற நம்பிக்கையில் தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. #இதற்கு நம்ம பிரசன்னம் பார்க்கவில்லையா? # அதெல்லாம் தெரியுமா உங்களுக்கு? உங்க பிரசன்னத்துல எனக்கு என்ன வந்துச்சி?
   உங்கள் நம்பிக்கையான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி உள்ளமே.சந்திப்போம் உள்ளமே.

   Delete
 14. கலக்கல் பதிவு.........சப்பா முடியல்ல மொழி நடை சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சிட்டுக் குருவியாரே. சோகத்தையும் கொஞ்சம் நகைச்சுவையா எழுதினேன். அவளோ தான். நன்றி உள்ளமே.

   Delete
 15. கலக்கல் பதிவு.........சப்பா முடியல்ல மொழி நடை சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. மறுபடியும் அதேவா? ஏன் இந்தக் கொடுமையெல்லாம்?

   Delete
 16. அப்புறம் உங்க ப்ரௌஸர் ல இருக்கிற history அதான் பா இஸுட்டுரி..அதெல்லாத்தையும் அழியுங்க மறுபடியும் browser a திறங்க முயற்சி பன்னிப் பாருங்க......... சரியாவரும் என நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. #அதான் பா இஸுட்டுரி..# ஆஹா.... எல்லாம் பண்ணிப் பார்த்தாச்சு. ஒன்னும் சரி வரல. பார்க்கலாம்.

   Delete
 17. அப்புறம் உங்க ப்ரௌஸர் ல இருக்கிற history அதான் பா இஸுட்டுரி..அதெல்லாத்தையும் அழியுங்க மறுபடியும் browser a திறங்க முயற்சி பன்னிப் பாருங்க......... சரியாவரும் என நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஓ! அந்த அம்பது கமெண்ட்சுக்கு தான் இதுவெல்லாமா? சொல்லவே இல்ல? நன்றி உள்ளமே. சந்திப்போம்.

   Delete
 18. //ஆனா கமெண்ட்ஸ் போடாம அப்பிடிக்கா திரும்பி ஓடிப் போயிருறீங்க. ஏன்யா என் வலைப்பதிவுக்கு மட்டும் இப்படியெல்லாம் பண்ணுறீங்க?//

  எல்லாருக்கும் இதே நிலைமை தான் நண்பா

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்.... என்ன பண்ண? எல்லாம் நம்ம நிலைமை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உள்ளமே. சந்திப்போம்.

   Delete
 19. நகைச்சுவையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே. முதல் வருகை தொடர் வருகையாகட்டும். சந்திப்போம் உள்ளமே.

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?