இன்னும் சொல்வேன் - 01

மனம். இயற்கையின் படைப்பில் அற்புதமானதொரு சிருஷ்டிப்பு. ஏனெனில் அதன் போக்கை நம்மாலேயே புரிந்து கொள்ள முடிவதில்லை. சந்தோஷமோ, துக்கமோ எதுவாயிருந்தாலும் அதனை மனதுக்குள்ளேயே வைத்தால் அதற்குப் பெயர் குப்பை தான். நமது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள போதிய நண்பர் வட்டமோ அல்லது அதற்கு ஒப்பான யாரோ இருந்தால் எந்த விதக் குப்பையுமே சேர வாய்ப்பில்லை. ஆனால் எதற்கும் வரையறை இருக்கிறதே? ஒருவர் மீது முழுமையான நம்பிக்கை அல்லது பாசத்தை வைக்காதவரை இந்த வரையறை நம்மை எதுவும் செய்யப் போவதில்லை. மாறாக, பாசம் என்பது நம்மை, நமது உணர்வுகளை வரையறைக்குட்படுத்துகிறது. 

அதாவது, ஒருவர் மீது உண்மையான பாசம் கொண்டிருந்தால் அவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பப் படுவதை நாம் விரும்பமாட்டோம். அந்த வேளையில் உங்களுக்கு ஏற்படும் ஒரு துன்பத்தை உடனே சொல்வீர்களா, அல்லது உங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்வீர்களா? இங்கே தான் அன்பின் வரையறை ஆரம்பமாகிறது. நாம் நம்மவரின் நலன் கருதி நமது துன்பங்களை அவரிடம் பகிர்ந்து கொள்ளாது போனாலும் கூட, நமது நலன் பாதிக்கப் படுகிறதே? இப்போது நாம் எதைப் பற்றி பேசப் போகிறோம் என்பது உங்களுக்கெல்லாம் புரிந்திருக்கும். 

Image Credit : Google / The Hindu Tamil


அந்த விடயத்திற்கு வருவதற்கு முன் இந்தத் தொடர் பற்றி ஒரு சிறிய அறிமுகம். இது ஒரு கட்டுரைத் தொடர். ஆனால் ஒரு விடயத்தை பற்றி மட்டும் பேசப் போவதில்லை. நாம் பேசப் போகும் ஒவ்வொரு விடயமும் நமது மனம் சார்ந்ததாகவே இருக்கும். அதிலும் முக்கியமாக, உங்கள் பின்னூட்டங்களினால் வழங்கப் படும் ஆலோசனைகள் அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஆராயப்படும். இனி விடயத்திற்கு வருவோம்.

அன்பின் வரையரைகளுக்குட்பட்டு நாம் நடப்பது சரியா, தவறா? அதெப்படிங்க தப்புன்னு சொல்ல முடியும்? அன்புக்கு கட்டுப்படாதவங்க யார் இருக்காங்க? இப்படித் தானே நீங்கள் கேட்கிறீர்கள்? அன்புக்கு கட்டுப் படுவது சரி. அதற்காக நம்முடைய சுயத்தை இழக்க வேண்டுமா என்பதே என் கேள்வி. இதே கேள்வியை என் வலைத் தளத் தோழி ஒருவரிடம் மின்னஞ்சல் மூலமாக முன்வைத்த போது அவர் தந்த பதில் இது: "அன்பிற்கு கட்டுப்படுவது சரியானதே.ஆனால் அதே அன்பு பேரம் பேசலுக்கு உட்படுகிறது அல்லது தான் செய்யும் தவறுகளையும் அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது என தோன்றினால் இடித்துரைக்கவேண்டும்.அங்கு கட்டுப்படுதல்களை தாண்டியதான கண்டிப்பு ஒன்று தேவை".

நிச்சயமாக. ஆனால் அந்தக் கண்டிப்பை அன்பு ஏற்க மறுத்தால்? அங்கே நமது சுயம் தொலைந்து போகிறது. நாம் நாமாக இருக்க அன்பு அனுமதிப்பதில்லை என்பதே என் கருத்து. எல்லா சந்தர்ப்பங்களிலுமே இவ்வாறு நிகழ்வதில்லை. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்கள் இவ்வாறு அமைந்து போவது தான் வேதனைக்குரியது. நமது சுகத்தையோ துக்கத்தையோ பகிர்ந்து கொள்வதை எப்போது இன்னொருவருக்கு சுமை என்றெண்ண ஆரம்பிக்கிறோமோ அங்கு உண்மைத் தன்மை இழக்கப்படுவதுடன் நாம் சுயத்தையும் இழந்து விடுகிறோம். இதை மாற்றிக் கொள்ள நம்மால் முடியுமா? முடியாதா? வாங்க பேசலாம். நான் முதலிலேயே சொன்னது போல தங்கள் கருத்துரைகள் தான் இத்தொடரை வழிநடத்திச் செல்லப் போகின்றன. ஆகவே தங்கள் பதிலைக் கொண்டு தான் அடுத்த அத்தியாயத்தை எழுதப் போகிறேன். காத்திருங்கள். இன்னும் சொல்வேன்.

இன்னும் சொல்வேன் - 01 
#மனம் #உள்ளம் #உரையாடல் #அன்பு #சுயம் #மகிழ்ச்சி #துக்கம் #பாசம் #நலன் #புரிதல் #கட்டுரை #தொடர் #இன்னும்_சொல்வேன் 

Post Created: 31.07.2012 
Edited at 19.04.2019 

Comments

  1. அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய அரிய
    விஷயங்கள் அடங்கிய தொடர் பதிவாக
    இத் தொடர் இருக்கும் என்பதை தங்கள்
    முன்னுரை விளக்கிப்போகிறது
    ஆவலுடன் தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகை தொடர் வருகையாகட்டும். தங்கள் எண்ணம் போலவே தொடர் அமையும் தோழா. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. தொடருங்கள்... வாழ்த்துக்கள்....

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தோழா.

      Delete
  3. வணக்கம் நண்பா..!சிறப்பானதொரு எண்ணக்கரு கொண்ட பதிவிற்கான ஆரம்பம்.வாழ்த்துக்கள்.சுயம் தொலையும் தான்.ஆனால் அதன் மூலம் நமகு அன்பிற்குரியவரிக்கு நன்மை நிகழ்கிறது என்றால்
    அந்த சுயம் இழத்தல் கவலைக்குரிய விடயமல்ல தோழா

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்தைக் கூறிச் சென்றிருக்கிறீர்கள். நன்றி தோழி.

      Delete
  4. அன்புதானே இயல்பு. அதுவே வலை. இது இல்லை என்று பொய்வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனாலும் இதுவே நிரந்தர மனித குணம். அடித்து விட்டு அழுகிற தாயும் உண்டு, தந்தையும் உண்டு, குருவும் உண்டு.
    தொடருங்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழி. # அடித்து விட்டு அழுகிற தாயும் உண்டு, தந்தையும் உண்டு, குருவும் உண்டு. # அருமை.

      Delete
  5. வருகைக்கு நன்றி நண்பா. நிச்சயம் வருகிறேன்.

    ReplyDelete
  6. அன்பு சகோதரருக்கு வணக்கம்! பதிவு அருமை! தொடருங்கள் தொடர்கிறோம்!
    http://vallimalaigurunadha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் தொடர்கைக்கும் நன்றிகள். நிச்சயம் உங்கள் தளம் வருகிறேன் தோழா.

      Delete
  7. வாழ்த்துக்கள் நண்பரே, தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தொடர்கைக்கும் நன்றிகள். உங்களுக்காய் இன்னும் சுவாரஷ்யமாக தொடரவிருக்கிறது நம் பதிவுகள். சந்திப்போம் தோழா.

      Delete
  8. தொடரின் அறிமுகமே சிறப்பாக அமைந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. அதே எதிர்பார்ப்புடன் காத்திருங்கள். இன்னும் சொல்வேன்! முதல் வருகை தொடர் வருகையாகட்டும்.

      Delete
  9. இன்னும் சொல்லுங்கள் பதிவு ரசனையாய் உள்ளது.
    இனி தொடர்ந்து சந்திப்போம் அண்ணா....
    தாங்கள் இலங்கையா?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பின்தொடர்கைக்குமாய் நன்றிகள் பல. என்னுடைய பழைய பதிவுகள் சிலவற்றையும் கொஞ்சம் வாசிக்கலாமே? ஆமாம். நான் இலங்கைதான். உலகம் அறியாத மலையகத்தைத் சேர்ந்தவன். சந்திக்கலாம் தோழா.

      Delete
  10. காலம் தாழ்ந்து வந்தமைக்கு வருந்துகிறேன்... இணையம் சரிவர வேலை செய்வது இல்லை....

    மனதை பெரிதும் நம்புபவன் நான்... ஆனால் அன்புக்கு கட்டுபடுதலில் சிலரிடம் தொறக்க வேண்டி வரும் என்றால் அந்த சிலர் நம் வாழ்க்கைக்கு தேவையானவர்கள் என்றால் அவர்களிடம் தோல்வி அடைவதில் தவறில்லை என்பது என் கருத்து... தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. காலம் தாழ்த்தியேனும் தவறாது வந்து கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றிகள் தோழா. அருமையான கருத்தைக் கூறியிருக்கிறீர்கள். இன்னும் பேசுவோம். காத்திருங்கள்.

      Delete
  11. அடிமைப்படுத்தல் அன்பு கிடையாது. ஆளுமை. உண்மையான அன்பான உள்ளம் அடக்கியாள விருப்பப்படாது. நட்பிலும் நம் குணமே வேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கலாம் . அதனை கட்டாயமாக்கக் கூடாது. எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்வதே நல்ல நட்பு. தீய வழிகளில் செல்லாமல் இருக்க நாம் அறிவுரை கூறலாம்.திருத்தலாம்.திருந்தலாம். அதுவே எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போடத்தேவை இல்லை. நண்பர் ஒருவர் முக நூலில் பகிர்ந்து கொண்டது
    " உறவுகளுடன் பொருந்திப்போக என்னை மாற்றி அமைத்துக்கொண்டே இருந்ததில் என் சுயம் என்னைக் கடந்து சென்றதைக்கூட கவனிக்க இயலவில்லை."
    நாம் மாற்றிக் கொண்ட சுயத்திற்கு யாரும் பின் மதிப்பளிப்பதும் இல்லை

    ReplyDelete
  12. அருமையான கருத்து. முத்தான கருத்துக்களுக்கு நன்றிகள் பல. சந்திப்போம் உள்ளமே.

    ReplyDelete
  13. நிறைய சிந்திக்க வைத்தது உங்கள் எழுத்துக்கள்! அதுவே உங்கள் வென்றி என்றும் புரிந்தது. பாராட்டுக்கள்!எனது வலைத் தளம்: ranjaninarayanan.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை தொடர் வருகையாகட்டும். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. விரைவில் உங்கள் தளம் வருகிறேன். சந்திப்போம் உள்ளமே.

      Delete
  14. மன்னிக்கவும். உங்கள் வெற்றி என்று படிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!