உங்கள் உள்ளம் திறந்து நண்பனிடம் சொல்லுங்கள்

இலங்கை மக்களின் மனங் கவர்ந்த "வெற்றி" வானொலியில் திங்கள் - வெள்ளி இரவு 8 மணி முதல் 11 மணி வரை ஒலிபரப்பாகிவரும்'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சி பற்றி தான் இந்தப் பதிவு பேசப் போகிறது. 

உங்கள் மனதில் கஷ்டமா? துக்கம் தாளாமல் அவதிப் படுகிறீர்களா? என் கஷ்டத்தை பகிர்ந்து கொள்வதற்கு நல்ல நண்பன் இல்லையே என்று கவலைப்படுகிறீர்களா? உடனே 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சிக்கு அழைப்பை ஏற்படுத்தி உங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் சோகத்தை முழுமையாக, சரியாக பகிர்ந்து கொள்வதற்கு இது மிகச்சிறந்ததொரு களமாகத் திகழ்கிறது. ஏனைய வானொலிகளைப் போல ஓரிரு நிமிடங்களுக்குள் உங்கள் துயரங்களை அடக்க வேண்டிய அவசியமில்லை. மனம் திறந்து என்னவெல்லாம் பேச நினைக்கிறீர்களோ அத்தனையையும் பேச 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சி மிகப் பொருத்தமானது. மிக நீண்ட காலமாக ஏராளமான நண்பர்கள் தங்கள் மனதை அடைத்துக் கொண்டிருந்த துக்கங்களைப் பகிர்ந்து ஆறுதல் பெற்றிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியைக் கேட்டாலோ , தொடர்பு கொண்டு உங்கள் சோகங்களைப் பகிர்ந்து கொண்டாலோ உங்களுக்கும் நிச்சயம் ஆறுதலும் தன்னம்பிக்கையும் கிடைக்கும் என்பது உறுதி. 

தொலைபேசி மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் உங்களைப் பற்றிய விபரங்களை "வெற்றி" வானொலிக்கு வழங்கிய பின்னர் அவர்களே உங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி உங்கள் சோகங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வானொலி வரலாற்றில் இதுவரை எந்தவொரு வானொலியும் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டதில்லை என்று கூறும் அளவுக்கு இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.

தற்போது 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சியை இணையத்தளத்தில் podcasting வடிவில் மீண்டும் கேட்கவும், குறித்த தளத்திலேயே எழுத்து மூலம் உங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்ளவும் வழி சமைக்கப் பட்டிருக்கிறது.


'ஹிஷாம் முஹமட்' எனும் இளம் அறிவிப்பாளனுக்குள் இத்தனை ஆளுமைகளா என்று ஆச்சரியப்பட வைக்கிறது இந்நிகழ்ச்சி. சோகங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பர்களுக்கு இவர் ஆறுதலும் அறிவுரையும் சொல்லும் விதம் அலாதியானது. 

"வெற்றி" வானொலியின் படைப்புகளுக்கெல்லாம் மகுடம் சூட்டினாற் போல இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. மேலும் வெள்ளி இரவு சிறப்பு 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சியைப் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும்.

வெள்ளி இரவு சிறப்பு நிகழ்ச்சியில் நண்பர்களின் மனதுக்கு தைரியமும் ஆறுதலும் மன உறுதியும் வழங்கும் வகையில் சுகி சிவம் போன்றோரின் சுய முன்னேற்ற உரைகள் ஒலிபரப்பப் படுகின்றன.

இவ்வாறான உரைகளைக் கேட்கும் போது மனம் சாதிக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறது. கவலைகளை மறந்து புத்துணர்ச்சி கொள்கிறது. இப்படி ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து வழங்குவதற்காக "வெற்றி" வானொலிக்கும் அறிவிப்பாளர் ஹிஷாமுக்கும் எமது பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

உலகளாவிய தமிழ் வானொலி ரசிகர்களே, நீங்களும் "வெற்றி" வானொலியின் 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சியை கேட்டு ரசிக்க வேண்டும். ரசிப்பதோடு நில்லாது உங்கள் சோகங்களையும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் வலு சேர்க்க வேண்டும் என மனதார கேட்டுக் கொள்கிறேன். உங்கள் உள்ளம் திறந்து 'நண்பனிடம் சொல்லுங்கள்'.

வானொலியில் கேட்க : கொழும்பு 99 .6 FM

ஊவா / தென் கிழக்கு 93 .6 FM

நாடு முழுவதும் 106 .7 FM

கண்டி / யாழ்ப்பாணம் 101.5 FM

வடக்கு / கிழக்கு 93.9 FM

இணையத்தில் கேட்க : "வெற்றி" இணையத்தளம்


தொடர்பு கொள்ள : தொ.பே. +94112304343

குறுஞ்செய்தி : +94718996996 

Comments

  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!