Sunday, March 10, 2013

அன்புடன் பாரதி!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! அனைவரும் நலமா? என்னடா இது, பாரதிய இவ்ளோ நாளா காணோமேன்னு நீங்கல்லாம் தேடிருப்பீங்க. எனது நிதிநிலைமை அதல பாதாளத்தில் வீழ்ந்ததனால் என்னால் வலைப்பதிவுக்கு வரமுடியாது போய்விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன். நண்பன் ஒருவனுக்கு உதவி செய்யப் போனதால் தான் எனக்கு இவ்வளவு கஷ்டமும் வேதனையும் வந்து சேர்ந்தது. பணம் இன்று வரும், நாளை போகும். ஆனால் நமது மனிதத் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமல்லவா? அதனை அந்த நண்பர் செய்யத் தவறிவிட்டார். பரவாயில்லை. காலம் தன் கடமையைச் செய்யும். அதுவரை நலம் வாழ வாழ்த்துக்கள்.


இந்தப் பதிவை நான் ஒரு கணினி மையத்தில் (Net Cafe) தட்டச்சு செய்து கொண்டிருக்கும் தருணத்தில் கணினி மையத்திற்கு அருகில் வாகன விபத்தொன்று இடம்பெற்றது. முச்சக்கர வண்டியொன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதிக் கொண்டன. யார் மீது தவறென்பதை விட வாகனங்களிலும் பாதையிலும் பயணிக்கும் பாதசாரிகளின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனால் நாம் இதற்காக "இனி வாகனங்களில் பயணிக்க மாட்டேன்" என்று சபதம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. நம் பயணத்தை நம் பாட்டில் தொடரத்தான் போகிறோம். இரண்டு நாட்களுக்கு மட்டும் வீதியில் எச்சரிக்கையாய் பயணிப்போம். மூன்றாம் நாள் எதையும் கணக்கெடுக்கப் போவதில்லை. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்?

நம் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் சோதனைகள் வந்தாலும் நம்மோடு தோள் கொடுத்து நிற்க யாரேனும் இருந்தால் நம்முடைய வாழ்க்கை என்றுமே சிறப்பாக அமையும். ஏதாச்சும் சொல்லனும்னு தோணிச்சு. அதான் இத சொன்னேன். இனி அடிக்கடி சந்திப்போம். வணக்கம் உள்ளங்களே!

Monday, December 31, 2012

போய்வா நண்பனே.....!


வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 2012 ஆம் ஆண்டின் இறுதி நாள் இது. இந்த ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அமைந்திருக்கும். ஒருவாறு உலக அழிவுப் பீதி ஒழிந்துவிட்டது. அப்படியும் அதை விடாமல் 2017 ஜனவரி 01 அன்று உலகம் அழியும் எனக் கூறிக் கொண்டு ஒரு குழு புறப்பட்டிருப்பதாகத் தகவல். வேணா... விட்டுருங்க...... உலகம் அழுதுரும்..... என்னளவில் மத்திம பலன்களைத் தந்த வருடம் இது. எண்ணியதில் நடக்காமல் போனவை பல, நடந்தவை சில. வழமைக்கு மாறாக ஆண்டிறுதி சிக்கல் தருவதாக அமைந்து விட்டது.


வலைத்தளத்திற்கு மீள் அறிமுகம் தந்து உள்நுழைந்த போது ஆரோக்கியமான முன்னேற்றம் இவ்வருடத்தில் கிட்டியுள்ளது. வலைத்தளம் பல புதிய நண்பர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. இன்னும் இனிக்கும் நினைவுகளும் கசக்கும் தருணங்களும் மனதில் முகம் காட்டிச் செல்கின்றன. இந்த ஆண்டு எனக்கு சில பாடங்களையும் கற்பித்துச் சென்றிருக்கிறது. சற்றே பயத்துடன் 2013 ஐ வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்த வருடத்தைப் போலவே அடுத்த வருடத்தின் மீதும் பலநூறு எதிர்பார்ப்புகள். எவை எவை நனவாகும் என்பதை யாரறிவார்?


என் வலைத்தள நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த 2013 புத்தாண்டு வாழ்த்துக்கள். எண்ணியவை எண்ணியபடி நடக்கவும் இன்னல்கள் நீங்கி இன்பங்கள் பெருகிடவும் உங்கள் அனைவரையும் "சிகரம்" வலைத்தளம் மனதார வாழ்த்துகிறது. காலம் கருணை காட்டினால் புது வருடத்தில் இனிதே சந்திப்போம். வாழ்த்துக்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிடிச்சிருந்தா பகிரலாமே?

கருத்து கந்தசாமி முகப்பலகை